Wednesday, June 12, 2013


படித்தது
தமிழகத்துக்கு காவிரி நீர் தர முடியாது கர்நாடகா மீண்டும் பிடிவாதம்

புதுடெல்லி : காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடகா மீண்டும் மறுத்துள்ளது. இதனால் எந்த முடிவும் எடுக்கப்படாமல் காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டம் முடிந்தது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு பிப்ரவரி மாதம் 19ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தற்காலிகமாக மேற்பார்வைக் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் கடந்த மே 10ம் தேதி உத்தரவிட்டது. 

ஜூன் 1ம் தேதி நடைபெற்ற காவிரி மேற்பார்வைக் குழுவின் முதல் கூட்டத்தில், தமிழகத்துக்கு காவிரியிலிருந்து ஜூன் மாதத்திற்கு வழங்க வேண்டிய 10 டி.எம்.சி தண்ணீரை பத்து நாட்களுக்கு ஒருமுறை 3.33 டி.எம்.சியாகத் தரவேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. அப்போது பருவமழை தொடங்காததால் தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடகா அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. 

இந்த நிலையில் காவிரி மேற்பார்வைக் குழுவின் 2வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. குழுவின் தலைவரும் மத்திய நீர்வளத்துறைச் செயலருமான எஸ்.கே.சர்க்கார் தலைமையில் பிற்பகல் 3 மணிக்கு ஸ்ரம் சக்தி பவனில் தொடங்கியது. இதில் தமிழகம் சார்பில் அரசு தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுப்பணித் துறைச் செயலர் சாய்குமார், காவிரி தொழில் நுட்பக்குழுத் தலைவர் சுப்பிரமணியன் கலந்து கொண்டனர். மேலும், கர்நாடகா அரசின் தலைமைச் செயலர் எஸ்.வி.ரங்கநாத், கேரள அரசு தலைமைச்செயலர் இ.கே.பரத்பூஷன், புதுச்சேரி தலைமைச் செயலர் சேத்தன் பி.சாங்கி, மத்திய நீர் ஆணையத்தலைவர் ராஜேஷ் குமார், குழுவின் உறுப்பினர் செயலரான மத்திய நீர் ஆணையத் தலைமைப் பொறியாளர் ஆகியோரும் பங்கேற்றனர். 

அப்போது, ''தமிழகத்தில் குறுவை சாகுபடி தொடங்கி உள்ள நிலையில் ஜூன் 12ம் தேதி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கர்நாடகா தண்ணீர் திறந்துவிடாததால் மேட்டூர் அணை வறண்டு காணப்படுகிறது. இதனால் அணையை திறக்க முடியவிலலை. ஜூன் 1 ம் தேதியிலிருந்து 20ம் தேதி வரை கர்நாடகா தரவேண்டிய 6.6 டி.எம்.சி தண்ணீரையும், ஏற்கனவே தரவேண்டிய 53.18 டி.எம்.சி தண்ணீரையும் சேர்த்து உடனடியாகத் திறந்து விட உத்தரவிட வேண்டும். அவ்வாறு தண்ணீர் திறந்து விடவில்லை என்றால் குறுவை சாகுபடி பாதிக்கும்'' என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. 

ஆனால், கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட நான்கு அணைகளிலும் 3.58 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே இருப்பதால் தமிழகத்துக்கு 10 டி.எம்.சி தண்ணீர் கொடுக்க முடியாது என்று கர்நாடகா தரப்பில்  தெரிவிக்கப்பட்டது. இதனால் எந்த முடிவும் எடுக்காமல் கூட்டம் முடிந்தது.

நினைத்தது
ஹையோ!!!!மீண்டும் கோர்ட், கேஸா??????

No comments:

Post a Comment