Wednesday, June 19, 2013

படித்தது................
பீகார் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி; காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவித்தார் நிதிஷ் குமார்

             பீகார் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றது.பீகார் சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. சட்டசபை கூடியதும் அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தை முதல்-மந்திரி நிதிஷ்குமார் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், நரேந்திரமோடியின் பெயரை குறிப்பிடாமல், பாரதீய ஜனதா கூட்டணி உடைந்ததற்கு குஜராத் முதல்-மந்திரிதான் காரணம் என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாரதீய  ஜனதா எம்.எல்.ஏ.க்கள், நரேந்திர மோடியை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினார்கள்
            அதன்பிறகு நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் உதய் நாராயண் சவுத்ரி அறிவித்தார். தீர்மானத்துக்கு ஆதரவாக 126 வாக்குகள் (ஐக்கிய ஜனதாதளம் - 117, காங்கிரஸ் - 4, இந்திய கம்யூனிஸ்டு -1, சுயேச்சைகள் -4) கிடைத்தன. நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக 24 வாக்குகள் (ராஷ்டிரீய ஜனதாதளம் - 22, சுயேச்சைகள் - 2) கிடைத்தன. 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபையில், நிதிஷ்குமார் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 122 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அந்த கட்சிக்கு 118 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். சபாநாயகர் நீங்கலாக அக்கட்சியின் 117 உறுப்பினர்களின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் 4 பேரும், சுயேச்சைகள் 4 பேரும், இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் ஒருவரின் ஆதரவும்  கிடைத்ததால் நம்பிக்கை தீர்மானம் எளிதில் வெற்றி பெற்று விட்டது.
             சட்டசபை கூட்டம் முடிந்த பின்னர் நிருபர்களிடம் பேசிய முதல்-மந்திரி நிதிஷ்குமார், நம்பிக்கை தீர்மானத்தை ஆதரித்த காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார். நிதிஷ்குமார் அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து இருப்பதால், பீகாரில் புதிய கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நினைத்தது...........

அரசியல் ஒரு சாக்கடை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கபடுகிறது. இவ்வளவு சீக்கிரம் சாயம் வெளுக்கிறதே, எப்படி????????

No comments:

Post a Comment