Friday, July 19, 2013

படித்தது..........

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கவலை அளிக்கிறது : பிரதமர்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தகதியில் இருப்பது கவலை அளிக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தொழில் அதிபர்களுக்கு மத்தியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தகதியில் இருப்பது கவலை அளிக்கிறது.
தேக்க நிலை, நிதி பற்றாக்குறையை சரி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நடப்புக் கணக்கு பாற்றாக்குறைக்கு கட்டுக்குள் வந்திருக்கிறது.
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த தங்கத்தின் மீதான முதலீட்டை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது என்று தெரிவித்துள்ளார்.
நினைத்தது......
காங்கிரஸ் அகலாதா என்ற கவலை எங்களுக்கு.....

Wednesday, July 17, 2013

படித்தது..........

வைகோ கிண்டல்: பெட்ரோல் விலை ரூ35.71-ல் இருந்தபோது, பதவியேற்றவர் மன்மோகன் சிங்!

மன்மோகன் சிங் அரசின் சாதனை, நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து, ரூபாயின் மதிப்பை வீழ்ச்சி அடையச் செய்ததுதான்” என்று குற்றம்சாட்டியுள்ள ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, மன்மோகன்சிங் 2004-ல் பதவி ஏற்றபோது, ரூபாய் 35.71 ஆக இருந்த பெட்ரோல் விலையை இப்போது, 73.60 அளவுக்கு உயர்த்தியுள்ளது அடுத்த சாதனை” என்று சாடியுள்ளார்.

ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை உயர்வுக்குக் கச்சா எண்ணெய் விலையைக் காரணம் காட்டுகிறார்கள். ஆனால், அண்டை நாடுகளிலும், ஆசியா, ஐரோப்பிய நாடுகளிலும் பெட்ரோல் விலை இந்தியாவைக் காட்டிலும் பன்மடங்கு குறைவாகவே உள்ளது.
2010 ஜூன் முதல் பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு ஒப்படைத்த பின்னர், பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்த்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
இதனால், எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி, விலைவாசியும் ஏறிக்கொண்டே போகிறது. மத்திய அரசு விலைவாசி ஏற்றத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல், தொடர்ந்து அலட்சியப்படுத்திக்கொண்டே இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து, ரூபாயின் மதிப்பை வீழ்ச்சி அடையச் செய்ததுதான் மன்மோகன் சிங் அரசின் சாதனை ஆகும்.

நினைத்தது........
என்று தணியும் இந்த ......

Wednesday, July 10, 2013

படித்தது........

நினைத்தது.........
ஐயோ!பாவம்!கருணாநிதி......

Monday, July 8, 2013

படித்தது........



நினைத்தது.....

டெசோ என்னாச்சோ????

Tuesday, June 25, 2013

படித்தது.......

டெல்லி மேல்–சபை தேர்தலில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு

     நேற்று இரவு திடீரென தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இது குறித்த தகவலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் எம்.பி. நிருபர்களிடம் தெரிவித்தார்.தமிழ்நாட்டில் நடக்க உள்ள மேல்–சபை தேர்தலில் தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் கனிமொழியை காங்கிரஸ் கட்சி ஆதரிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேரும் கனிமொழிக்கு தனது வாக்கினை அளிப்பார்கள்.
   தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதால் தி.மு.க.வுக்கு 32 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைக்க உள்ளது. அதே நேரத்தில் தே.மு.தி.க.வுக்கு 22 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுகளே கிடைக்கும் நிலை உள்ளது. எனவே டெல்லி மேல்–சபை தேர்தலில் 6–வது எம்.பி.யாக கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
    இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பிய கடித்தத்தில் கூறியிருப்பதாவது:- காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். காரணம் மேல்-சபை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு, காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அறிவித்ததற்காக நன்றி கூறி கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

நினைத்தது........
 
  அப்போ இலங்கை தமிழர்கள் காரணம் கூறி இவர்கள் ஆடியது பித்தலாட்டம்.......
 இப்போதாவது தி.மு.க மற்றும் காங்கிரசின் வேஷம் கலைந்ததே....கடவுளே இவர்களிருந்து நாட்டை காப்பாற்றுவாயா??????

Friday, June 21, 2013

படித்தது......

ராஜ்யசபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: ராமதாஸ் அறிவிப்பு-திகிலில் திமுக!

           ராஜ்யசபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது என்று பா.ம.க. அறிவித்துவிட்டது. இதனால் தி.மு.க. வேட்பாளர் கனிமொழியின் வெற்றி தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.
ராஜ்யசபா தேர்தலில் பா.ம.க.வின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து முடிவெடுக்க சென்னையில் இன்று அக்கட்சியின் செயற்குழுக் கூடியது.
இந்த கூட்டத்தில் ராஜ்யசபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
           பாமகவிடம் ஆதரவு கேட்டு பேச்சுவார்த்தை நடத்தினார் ஸ்டாலின். துரைமுருகன் மூலமும் பேச்சு நடத்தப்பட்டது.
ஆனால் இனி திராவிட கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று நிலைப்பாட்டினை எடுத்துள்ள பாமக ராஜ்யசபா தேர்தலில் ஆதரவு தரப் போவதில்லை என அறிவித்துள்ளது. இதனால் கனிமொழியின் வெற்றி வாய்ப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நினைத்தது......
அடேயப்பா என்னவெல்லாம் மாய்மாலம் செய்யவேண்டியுள்ளது அரசியலில்.....

 

Wednesday, June 19, 2013

படித்தது................
பீகார் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி; காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவித்தார் நிதிஷ் குமார்

             பீகார் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றது.பீகார் சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. சட்டசபை கூடியதும் அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தை முதல்-மந்திரி நிதிஷ்குமார் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், நரேந்திரமோடியின் பெயரை குறிப்பிடாமல், பாரதீய ஜனதா கூட்டணி உடைந்ததற்கு குஜராத் முதல்-மந்திரிதான் காரணம் என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாரதீய  ஜனதா எம்.எல்.ஏ.க்கள், நரேந்திர மோடியை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினார்கள்
            அதன்பிறகு நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் உதய் நாராயண் சவுத்ரி அறிவித்தார். தீர்மானத்துக்கு ஆதரவாக 126 வாக்குகள் (ஐக்கிய ஜனதாதளம் - 117, காங்கிரஸ் - 4, இந்திய கம்யூனிஸ்டு -1, சுயேச்சைகள் -4) கிடைத்தன. நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக 24 வாக்குகள் (ராஷ்டிரீய ஜனதாதளம் - 22, சுயேச்சைகள் - 2) கிடைத்தன. 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபையில், நிதிஷ்குமார் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 122 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அந்த கட்சிக்கு 118 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். சபாநாயகர் நீங்கலாக அக்கட்சியின் 117 உறுப்பினர்களின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் 4 பேரும், சுயேச்சைகள் 4 பேரும், இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் ஒருவரின் ஆதரவும்  கிடைத்ததால் நம்பிக்கை தீர்மானம் எளிதில் வெற்றி பெற்று விட்டது.
             சட்டசபை கூட்டம் முடிந்த பின்னர் நிருபர்களிடம் பேசிய முதல்-மந்திரி நிதிஷ்குமார், நம்பிக்கை தீர்மானத்தை ஆதரித்த காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார். நிதிஷ்குமார் அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து இருப்பதால், பீகாரில் புதிய கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நினைத்தது...........

அரசியல் ஒரு சாக்கடை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கபடுகிறது. இவ்வளவு சீக்கிரம் சாயம் வெளுக்கிறதே, எப்படி????????

Saturday, June 15, 2013

படித்தது

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு ‘தண்ணீர் திறந்து விட கர்நாடகாவை மத்திய அரசு வலியுறுத்தும்’ மத்திய மந்திரி நாராயணசாமி பேட்டி

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகாவை மத்திய அரசு வலியுறுத்தும்’’ என மத்திய மந்திரி நாராயணசாமி கூறினார்.

நினைத்தது

கூடன்குளம் அறிவிப்பு புகழ் நாரயணசுவாமி வாய் திறந்துவிட்டார், இனி காவேரி தண்ணீர் கிடைத்த மாதிரிதான்??????

Thursday, June 13, 2013

படித்தது

கருணாநிதிக்கு மேடையேறிப் போய் வணக்கம் வைத்த சோ!

சென்னை: சென்னையில் நேற்று நடந்த முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் கருணாநிதியை, மேடை ஏறிப் போய் வணக்கம் வைத்தார் துக்ளக் ஆசிரியர் சோ.
திருநாவுக்கரசரின் மகன் அன்பரசன் திருமணம் நேற்று சென்னையில்நடந்தது. அதில் திமுக தலைவர் கருணாநிதி உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
துக்ளக் ஆசிரியர் சோவும் திருமணத்திற்கு வந்திருந்தார். வந்தவர் மேடைக்கு எதிர்புறம் இருக்கையில் அமர்ந்திருந்தார். அந்த சமயத்தில் திமுக தலைவர் கருணாநிதி வந்தார். அவர் மேடைக்கு வந்ததைப் பார்த்த சோ, உடனே மேடை ஏறிப் போனார். பின்னர் கருணாநிதியை கும்பிட்டு வணக்கம் என்று கூறினார்.
அதைப் பார்த்த கருணாநிதியும் பதில் வணக்கம் வைத்துப் புன்னகைத்தார். முதல்வர் ஜெயலலிதா தரப்புக்கு மிகவும் நெருக்கமானவர் சோ என்பது அனைவரும் அறிந்தது. இந்த நிலையில் கருணாநிதியை மேடை ஏறிச் சென்று வணக்கம் வைத்த சோவின் பண்பை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
நினைத்தது
இப்படியும் நல்ல பண்புள்ள மனிதர்கள் இருக்கிறார்கள்

Wednesday, June 12, 2013


படித்தது
தமிழகத்துக்கு காவிரி நீர் தர முடியாது கர்நாடகா மீண்டும் பிடிவாதம்

புதுடெல்லி : காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடகா மீண்டும் மறுத்துள்ளது. இதனால் எந்த முடிவும் எடுக்கப்படாமல் காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டம் முடிந்தது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு பிப்ரவரி மாதம் 19ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தற்காலிகமாக மேற்பார்வைக் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் கடந்த மே 10ம் தேதி உத்தரவிட்டது. 

ஜூன் 1ம் தேதி நடைபெற்ற காவிரி மேற்பார்வைக் குழுவின் முதல் கூட்டத்தில், தமிழகத்துக்கு காவிரியிலிருந்து ஜூன் மாதத்திற்கு வழங்க வேண்டிய 10 டி.எம்.சி தண்ணீரை பத்து நாட்களுக்கு ஒருமுறை 3.33 டி.எம்.சியாகத் தரவேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. அப்போது பருவமழை தொடங்காததால் தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என்று கர்நாடகா அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. 

இந்த நிலையில் காவிரி மேற்பார்வைக் குழுவின் 2வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. குழுவின் தலைவரும் மத்திய நீர்வளத்துறைச் செயலருமான எஸ்.கே.சர்க்கார் தலைமையில் பிற்பகல் 3 மணிக்கு ஸ்ரம் சக்தி பவனில் தொடங்கியது. இதில் தமிழகம் சார்பில் அரசு தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுப்பணித் துறைச் செயலர் சாய்குமார், காவிரி தொழில் நுட்பக்குழுத் தலைவர் சுப்பிரமணியன் கலந்து கொண்டனர். மேலும், கர்நாடகா அரசின் தலைமைச் செயலர் எஸ்.வி.ரங்கநாத், கேரள அரசு தலைமைச்செயலர் இ.கே.பரத்பூஷன், புதுச்சேரி தலைமைச் செயலர் சேத்தன் பி.சாங்கி, மத்திய நீர் ஆணையத்தலைவர் ராஜேஷ் குமார், குழுவின் உறுப்பினர் செயலரான மத்திய நீர் ஆணையத் தலைமைப் பொறியாளர் ஆகியோரும் பங்கேற்றனர். 

அப்போது, ''தமிழகத்தில் குறுவை சாகுபடி தொடங்கி உள்ள நிலையில் ஜூன் 12ம் தேதி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கர்நாடகா தண்ணீர் திறந்துவிடாததால் மேட்டூர் அணை வறண்டு காணப்படுகிறது. இதனால் அணையை திறக்க முடியவிலலை. ஜூன் 1 ம் தேதியிலிருந்து 20ம் தேதி வரை கர்நாடகா தரவேண்டிய 6.6 டி.எம்.சி தண்ணீரையும், ஏற்கனவே தரவேண்டிய 53.18 டி.எம்.சி தண்ணீரையும் சேர்த்து உடனடியாகத் திறந்து விட உத்தரவிட வேண்டும். அவ்வாறு தண்ணீர் திறந்து விடவில்லை என்றால் குறுவை சாகுபடி பாதிக்கும்'' என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. 

ஆனால், கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட நான்கு அணைகளிலும் 3.58 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே இருப்பதால் தமிழகத்துக்கு 10 டி.எம்.சி தண்ணீர் கொடுக்க முடியாது என்று கர்நாடகா தரப்பில்  தெரிவிக்கப்பட்டது. இதனால் எந்த முடிவும் எடுக்காமல் கூட்டம் முடிந்தது.

நினைத்தது
ஹையோ!!!!மீண்டும் கோர்ட், கேஸா??????

Monday, June 10, 2013

தன் முதுகில் இருக்கும் அழுக்கை பற்றி கவலைப்படாத காங்கிரசின் நடிப்பு

மோடி நியமனத்தால் பா.ஜனதாவின் அழிவு ஆரம்பமாகிவிட்டது: காங்கிரஸ்

பா.ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரக்குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். அவரை சமாதானப்படுத்த முயற்சி நடந்து வருகிறது.

மோடியை நியமிப்பதால் மக்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள முடியும் என்று பா.ஜனதா கணக்கு போட்டுள்ள நிலையில், மோடியின் நியமனத்தை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திவேதி கூறியதாவது:-

பா.ஜனதாவின் பிரச்சாரக்குழு தலைவராக மோடியை நியமித்திருப்பது வழக்கத்திற்கு மாறான ஒன்றாகும். பா.ஜனதாவின் முழுமையான சீரழிவுக்கு இது ஆரம்பம் ஆகும். 

அத்வானி ராஜினாமா செய்திருப்பது பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை. மோடிக்கு உயர் பதவி கொடுத்தால் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நாங்கள் ஏற்கனவே கூறினோம். அதில் ஒன்றுதான் அத்வானி ராஜினாமா.

மோடியை பிரச்சார குழு தலைவராக நியமித்திருப்பதால், காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மக்களவைத் தேர்தலில் எந்த மாற்றம் ஏற்படாது. காங்கிரஸ் கட்சி தனது பாதையில் தொடர்ந்து செல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Sunday, June 9, 2013

இந்தியாவை மீண்டும் தலை நிமிறச்செய்யும் செய்தியை படியுங்கள்

பாஜக தேர்தல் பிரச்சாரக்குழுத் தலைவரானார் நரேந்திர மோடி

2014 இல் நடைபெற உள்ள தேர்தலுக்கு பாஜகவின் தேர்தல் பிரச்சாரக்குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் கோவா செயற்குழு கூட்டத்தில் முறைப்படி அறிவித்தார்.

பிரச்சாரக் குழுவின் தலைவரானதை அடுத்து நரேந்திர மோடி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்வார். பிரச்சாரத்திற்கு தலைமையேற்று பாஜகவை வெற்றிப் பாதைக்கு மோடி அழைத்துச் செல்வார் என்று ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மோடிக்கு முக்கியத்துவம் கொடுப்படுவதை எதிர்க்கும் பொருட்டு அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கட்சியின் தேசிய செயற்குழுவைப் புறக்கணித்ததாக சொல்லப்பட்ட போதிலும் நரேந்திர மோடிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் பிரச்சாரக்குழு தலைவர் என்ற பொருப்பு வழங்கப்பட்டுள்ளது.
படித்த பின் ..........................

அத்வானிக்கு நன்றியே இல்லாமல் நடந்து கொண்டுள்ளது பாஜக - திக்விஜய் சிங் சாடல்


சாதாரண கட்சியாக இருந்த பாஜகவை மிகப் பெரிய எதிர்க்கட்சியாக உருவாக்கிய பெருமை அத்வானிக்கு மட்டுமே உண்டு. ஆனால் நன்றியே இல்லாமல் நடந்து கொண்டுள்ளது பாஜக என்று கூறியுள்ளார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங்.
நரேந்திரமோடி பாஜக தேசிய பிரசாரக் குழுத்தலைவராக நியமிக்கப்பட்ட அறிவிப்பு வெளியானதும் அதுகுறித்து திக்விஜய் சிங் கருத்து தெரிவித்தார்.இதுதொடர்பாக அவர் டிவிட்டரில் வெளியிட்ட கருத்தில், அத்வானிக்காக நான் மனம் இரங்குகிறேன். பாஜக அவரிடம் நன்றேய இல்லாமல் நடந்து கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் 2 எம்.பிக்களை மட்டுமே வைத்திருந்த பாஜகவுக்கு 182 எம்.பிக்கள் கிடைக்க அத்வானியே காரணம் என்று கூறியுள்ளார் திக்விஜய் சிங்.
பாரதிய ஜனசங்கம் என்று இருந்த கட்சிதான் பின்னர் பாஜகவாக உருமாறியது. இந்த உருமாற்றத்தின் முக்கியப் பங்காளர்கள் வாஜ்பாயி மற்றும் அத்வானி என்பது குறிப்பிடத்தக்கது. 1980ம் ஆண்டு பாஜக உருவானது. அன்று முதல் தொடர்ந்து பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் அத்வானி பங்கெடுத்து வந்தார். ஆனால் முதல்முறையாக அவர் கோவா கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
..................................நினைவுக்கு வந்த பழைய கதை
ஆடு நனைகிறதே என ஓநாய் அழுததாம்

Tuesday, June 4, 2013

படித்தது

ஆர்.டி.ஐ வரம்புக்குள் கொண்டு வருவதா? மத்திய தகவல் ஆணைய தீர்ப்புக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்


தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் அரசியல் கட்சிகளும் வரும் என்று மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு பல்வேறு அரசியல்கட் சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டத்தின் வரம்புக்குள் அரசியல் கட்சிகளும் வரும் என்று மத்திய தகவல்  ஆணையம் நேற்றுமுன்தினம் தீர்ப்பு கூறியது. இதன்படி, கட்சிக்கு வந்த நன்கொடை எவ்வளவு, அதை கொடுத்தவர்கள், வேட்பாளர் தேர்வு முறை உள்ளிட்ட பல  தகவல் களை கட்சிகளிடம் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் மக்கள் கேட்டு பெறலாம். இந்த தீர்ப்புக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ்  பொதுச் செயலாளர் ஜனார்த்தன் துவேதி டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், மத்திய தகவல் ஆணையத் தின் உத்தரவை ஏற்கமுடியாது. அதை  நாங்கள் நிராகரிக்கிறோம். தகவல் ஆணையத்தின் இதுபோன்ற செயல்பாடுகள், ஜனநாயக அமைப்புகளை நாசமாக்கி விடும் என்றார்.ஐக்கிய ஜனதா தள  தலைவர் சரத் யாதவ் கூறியதாவது: தகவல் ஆணையத்தின் உத்தரவு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கிறது. 

நினைத்தது

மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயப்படவேண்டும்

இப்போது புரிகிறது இவர்களின் சாயம் வெளுக்கும் விஷயம்

கடவுளே இவர்களிடமிருந்து நாடு காப்பாற்றபடட்டும்



Sunday, June 2, 2013

படித்தது

2ஜி வழக்கில் தயாளு அம்மாள் சாட்சி; கருணாநிதி கருத்து


2ஜி வழக்கில் சாட்சி சொல்ல சிபிஐ நீதிமன்றம் தயாளு அம்மாவை நேரில் வர வேண்டும் என்று உத்தரவிட்டதை பற்றி கருணாநிதி கூறும் போது, இந்த உத்தரவு இறுதியானதல்ல, இது குறித்து வழகுரைஞர்களிடம் அலோசனை செய்துவிட்டு முடிவெடுப்போம் என்று கூறினார்.

திமுக தலைவர் கருணாநிதி இது குறித்து பேசும் போது, பொதுவாக நீதிமன்ற உத்தரவுகளைப் பற்றி எப்போதும் நான் கருத்து தெரிவிப்பது இல்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரையில் என் துணைவியார் தயாளு அம்மாளுக்கு உடல் நலம் சரியில்லை என்பது தமிழகம் முழுவதும் அறிந்த செய்தியாகும். அவரால் விமானத்தில் பயணம் மேற்கொள்வதே முடியாது. ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வருவதற்கான மருத்துவச் சான்றிதழ்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

நீதிபதிக்கு முன்னால் இந்த விவரங்கள் நேரில் எடுத்துரைக்கப்பட்ட போதே, மத்திய அரசுக்குச் சொந்தமான மருத்துவ மனையிலே உள்ள மருத்துவர்கள் குழு நேரில் வீட்டிற்கே வந்திருந்து, தயாளுவின் உடல் நிலையை பார்த்து அறிக்கை தரலாம் என்ற வேண்டுகோளினை நீதிபதி முன்பு வாதிட்டபோது, நீதிபதி அவர்களே, எந்த மருத்துவமனை என்பது பற்றி கேட்டறிந்து; புதுவையில் உள்ள “ஜிப்மர்” மருத்துவமனை என்று கூறப்பட்டு; அந்த ஜிப்மர் மருத்துவ மனையிலிருந்து அந்த மருத்துவர்களை அழைத்து வரும் செலவினை யார் ஏற்றுக் கொள்வது என்ற பிரச்சினையும் எழுந்து, அந்தச் செலவினையும் நாங்களே ஏற்றுக் கொள்வோம் என்று உறுதி கூறப்பட்டு அதையெல்லாம் நீதிபதி அவர்கள் குறித்துக் கொண்டதோடு, ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் வரும்போது, எங்கள் குடும்ப மருத்துவரும் உடன் இருக்க அனுமதி கேட்டு, அதுவும் பரிசீலிக்கப்படும் என்று கூறப்பட்டது. 

சி.பி.ஐ. தரப்பினரும் அதனை ஏற்றுக் கொண்டு, ஜிப்மர் மருத்துவ மனை டாக்டர்களே நேரில் வந்து பரிசோதிக்கலாம் என்று ஒப்புதல் அளித்தார்கள். ஆனால் இவ்வளவிற்கும் பிறகு, இரண்டு நாட்கள் கழித்து சி.பி.ஐ. நீதிபதி தற்போது நேரில் வர வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்க என்ன காரணம் என்று தெரியவில்லை. 

இந்த உத்தரவே இறுதியானதல்ல என்பதால், இதற்கு மேல் என்ன செய்வது என்பது பற்றி வழக்கறிஞர்களுடன் கலந்து பேசித்தான் முடிவெடுக்க வேண்டும். இதற்கு மேற்கொண்டும் என் மனைவி, நேரில் தான் வந்து சாட்சியம் அளிக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டு, அதனால் அவருடைய தற்போதைய உடல் நிலைக்கு மேலும் ஏதாவது பாதிப்பு ஏற்படுமேயானால், அதற்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்? என்று கருணாநிதி தெரிவித்தார்.


நினைத்தது

வெங்காயத்தின் விலை பற்றி கேட்டபோது "பெரியாரிடம் போய் கேள்" என்று எகத்தாளமாய் கேட்ட வாய் எப்படி புலம்புகிறது இப்போது!!!!!!!!!!
"ஐயோ கொல்றாங்களே" என்று கூவுவது கேட்கிறதே"


Friday, May 31, 2013

படித்த செய்தி

2ஜி வழக்கில் தயாளு அம்மாள் மனு தள்ளுபடி: நேரில் ஆஜராக உத்தரவு

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாகவும், இந்த ஊழல் பணத்தில் ரூ.200 கோடி கலைஞர் டி.வி.க்கு வந்ததாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. எனவே, 2ஜி ஊழல் வழக்கில் கலைஞர் டி.வி. இயக்குனரான தயாளு அம்மாளின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், விசாரணைக்காக நேரில் ஆஜராவதில் விலக்கு அளிக்கக் கோரி தயாளு அம்மாள் சார்பில் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 82 வயதாகும் தயாளு அம்மாள் தனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்க அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன


அடித்த கமென்ட்
ஐயோ பாவம்!!!!!!!!!!!!
கருணாநிதியின் 90ஆவது பிறந்த நாளில் கிடைத்த பரிசுக்கு