Friday, July 19, 2013

படித்தது..........

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கவலை அளிக்கிறது : பிரதமர்

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தகதியில் இருப்பது கவலை அளிக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தொழில் அதிபர்களுக்கு மத்தியில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தகதியில் இருப்பது கவலை அளிக்கிறது.
தேக்க நிலை, நிதி பற்றாக்குறையை சரி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நடப்புக் கணக்கு பாற்றாக்குறைக்கு கட்டுக்குள் வந்திருக்கிறது.
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த தங்கத்தின் மீதான முதலீட்டை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது என்று தெரிவித்துள்ளார்.
நினைத்தது......
காங்கிரஸ் அகலாதா என்ற கவலை எங்களுக்கு.....

Wednesday, July 17, 2013

படித்தது..........

வைகோ கிண்டல்: பெட்ரோல் விலை ரூ35.71-ல் இருந்தபோது, பதவியேற்றவர் மன்மோகன் சிங்!

மன்மோகன் சிங் அரசின் சாதனை, நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து, ரூபாயின் மதிப்பை வீழ்ச்சி அடையச் செய்ததுதான்” என்று குற்றம்சாட்டியுள்ள ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, மன்மோகன்சிங் 2004-ல் பதவி ஏற்றபோது, ரூபாய் 35.71 ஆக இருந்த பெட்ரோல் விலையை இப்போது, 73.60 அளவுக்கு உயர்த்தியுள்ளது அடுத்த சாதனை” என்று சாடியுள்ளார்.

ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை உயர்வுக்குக் கச்சா எண்ணெய் விலையைக் காரணம் காட்டுகிறார்கள். ஆனால், அண்டை நாடுகளிலும், ஆசியா, ஐரோப்பிய நாடுகளிலும் பெட்ரோல் விலை இந்தியாவைக் காட்டிலும் பன்மடங்கு குறைவாகவே உள்ளது.
2010 ஜூன் முதல் பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு ஒப்படைத்த பின்னர், பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்த்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
இதனால், எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி, விலைவாசியும் ஏறிக்கொண்டே போகிறது. மத்திய அரசு விலைவாசி ஏற்றத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல், தொடர்ந்து அலட்சியப்படுத்திக்கொண்டே இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து, ரூபாயின் மதிப்பை வீழ்ச்சி அடையச் செய்ததுதான் மன்மோகன் சிங் அரசின் சாதனை ஆகும்.

நினைத்தது........
என்று தணியும் இந்த ......

Wednesday, July 10, 2013

படித்தது........

நினைத்தது.........
ஐயோ!பாவம்!கருணாநிதி......

Monday, July 8, 2013

படித்தது........



நினைத்தது.....

டெசோ என்னாச்சோ????

Tuesday, June 25, 2013

படித்தது.......

டெல்லி மேல்–சபை தேர்தலில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு

     நேற்று இரவு திடீரென தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இது குறித்த தகவலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் எம்.பி. நிருபர்களிடம் தெரிவித்தார்.தமிழ்நாட்டில் நடக்க உள்ள மேல்–சபை தேர்தலில் தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் கனிமொழியை காங்கிரஸ் கட்சி ஆதரிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேரும் கனிமொழிக்கு தனது வாக்கினை அளிப்பார்கள்.
   தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதால் தி.மு.க.வுக்கு 32 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைக்க உள்ளது. அதே நேரத்தில் தே.மு.தி.க.வுக்கு 22 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுகளே கிடைக்கும் நிலை உள்ளது. எனவே டெல்லி மேல்–சபை தேர்தலில் 6–வது எம்.பி.யாக கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
    இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பிய கடித்தத்தில் கூறியிருப்பதாவது:- காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். காரணம் மேல்-சபை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு, காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அறிவித்ததற்காக நன்றி கூறி கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

நினைத்தது........
 
  அப்போ இலங்கை தமிழர்கள் காரணம் கூறி இவர்கள் ஆடியது பித்தலாட்டம்.......
 இப்போதாவது தி.மு.க மற்றும் காங்கிரசின் வேஷம் கலைந்ததே....கடவுளே இவர்களிருந்து நாட்டை காப்பாற்றுவாயா??????

Friday, June 21, 2013

படித்தது......

ராஜ்யசபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: ராமதாஸ் அறிவிப்பு-திகிலில் திமுக!

           ராஜ்யசபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது என்று பா.ம.க. அறிவித்துவிட்டது. இதனால் தி.மு.க. வேட்பாளர் கனிமொழியின் வெற்றி தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.
ராஜ்யசபா தேர்தலில் பா.ம.க.வின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து முடிவெடுக்க சென்னையில் இன்று அக்கட்சியின் செயற்குழுக் கூடியது.
இந்த கூட்டத்தில் ராஜ்யசபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
           பாமகவிடம் ஆதரவு கேட்டு பேச்சுவார்த்தை நடத்தினார் ஸ்டாலின். துரைமுருகன் மூலமும் பேச்சு நடத்தப்பட்டது.
ஆனால் இனி திராவிட கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று நிலைப்பாட்டினை எடுத்துள்ள பாமக ராஜ்யசபா தேர்தலில் ஆதரவு தரப் போவதில்லை என அறிவித்துள்ளது. இதனால் கனிமொழியின் வெற்றி வாய்ப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நினைத்தது......
அடேயப்பா என்னவெல்லாம் மாய்மாலம் செய்யவேண்டியுள்ளது அரசியலில்.....

 

Wednesday, June 19, 2013

படித்தது................
பீகார் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி; காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவித்தார் நிதிஷ் குமார்

             பீகார் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றது.பீகார் சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. சட்டசபை கூடியதும் அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தை முதல்-மந்திரி நிதிஷ்குமார் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், நரேந்திரமோடியின் பெயரை குறிப்பிடாமல், பாரதீய ஜனதா கூட்டணி உடைந்ததற்கு குஜராத் முதல்-மந்திரிதான் காரணம் என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாரதீய  ஜனதா எம்.எல்.ஏ.க்கள், நரேந்திர மோடியை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினார்கள்
            அதன்பிறகு நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் உதய் நாராயண் சவுத்ரி அறிவித்தார். தீர்மானத்துக்கு ஆதரவாக 126 வாக்குகள் (ஐக்கிய ஜனதாதளம் - 117, காங்கிரஸ் - 4, இந்திய கம்யூனிஸ்டு -1, சுயேச்சைகள் -4) கிடைத்தன. நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக 24 வாக்குகள் (ராஷ்டிரீய ஜனதாதளம் - 22, சுயேச்சைகள் - 2) கிடைத்தன. 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபையில், நிதிஷ்குமார் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 122 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அந்த கட்சிக்கு 118 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். சபாநாயகர் நீங்கலாக அக்கட்சியின் 117 உறுப்பினர்களின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் 4 பேரும், சுயேச்சைகள் 4 பேரும், இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் ஒருவரின் ஆதரவும்  கிடைத்ததால் நம்பிக்கை தீர்மானம் எளிதில் வெற்றி பெற்று விட்டது.
             சட்டசபை கூட்டம் முடிந்த பின்னர் நிருபர்களிடம் பேசிய முதல்-மந்திரி நிதிஷ்குமார், நம்பிக்கை தீர்மானத்தை ஆதரித்த காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறினார். நிதிஷ்குமார் அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து இருப்பதால், பீகாரில் புதிய கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நினைத்தது...........

அரசியல் ஒரு சாக்கடை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கபடுகிறது. இவ்வளவு சீக்கிரம் சாயம் வெளுக்கிறதே, எப்படி????????