Saturday, February 18, 2012

முஸ்லிம் இட ஒதுக்கீடு பற்றி பேச்சு: பெனிபிரசாத் திடீர் பல்டி-வாய்தவறி பேசி விட்டேன்

லக்னோ, பிப். 18-
உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் மனைவி லூயிஸ் குர்ஷித் பரூக்காபாத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மத்திய உருக்குத்துறை மந்திரி பெனிபிரசாத் வர்மா கடந்த 15-ந்தேதி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு உயர்த்தப்படும். இதுகுறித்து தேர்தல் கமிஷன் என் மீது என்ன நடவடிக்கை எடுக்க விரும்பினாலும் வரவேற்கிறேன் என்று பேசினார்.
தேர்தல் கமிஷனுக்கு சவால் விடும் வகையில் அவர் பேசியது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து நடத்தை விதிமுறைகளை மீறியதாக பெனி பிரசாத் வர்மா மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் கமிஷனிடம் பா.ஜனதா நேரில் புகார் அளித்து உள்ளது. இதன் காரணமாக அவர் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய மந்திரி பெனிபிரசாத் வர்மா, தான் வாய் தவறி பேசி விட்டதாக திடீர் பல்டி அடித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நான் வாய் தவறி அப்படி பேசி விட்டேன். நாங்கள் தேர்தல் கமிஷனை மிகவும் மதிக்கிறோம். 4 அல்லது 5 தேர்தல் கூட்டங்களில் பேசுகிறேன். எல்லாம் நினைவில் இருக்காது. ஆனால் நான் தவறாக பேசக்கூடாது. நான் எப்போதுமே சரியாக பேசக் கூடியவன்.


Comment: Minister said that he had spoken mistakenly regarding reservation to Muslims. What a minister he is? In india only it can happen. Now EC will accept his statement and will take no action against him. Shame!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment