இந்த அறிக்கை குறித்து மாதவன் நாயர் குறிப்பிடுகையில், "இஸ்ரோ தலைவர் தனிப்பட்ட முறையில் பழி வாங்கும் நோக்கோடு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் நியாயம் இல்லை. இந்த அறிக்கை ஒரு தலைப்பட்சமானது' என்றார்
இதற்கு பதிலளித்த இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் குறிப்பிடுகையில், "நாங்கள் என்ன சொல்ல வேண்டும் என நினைத்தோமோ, அதை தான் இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம். நான்கு பக்க அறிக்கையில் கிட்டத்தட்ட அனைத்தையும் சொல்லிவிட்டோம். இது என் தனிப்பட்ட கருத்தல்ல. மாதவன் நாயர் தான், தனக்கு தேவையான கருத்தை எடுத்துக் கொண்டு காரணம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்' என்றார்.
தலையிட்டது பிரதமர் அலுவலகம்:இந்நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தலையிட்டுள்ளது. பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி, இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்தம் தொடர்பாக, தனக்கு விளக்கம் தர வாய்ப்பு வழங்கப்படவில்லை என, மாதவன் நாயர் நாட்டு மக்களுக்கு தவறான தகவலை தெரிவித்துள்ளார்.
ஆனால், பிரத்யூஷ் சின்கா கமிட்டியின் அறிக்கையில், மாதவன் நாயரிடம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில், இயற்கையான நீதி பின்பற்றப்பட்டுள்ளது. இதேபோல், மற்ற விஞ்ஞானிகளுக்கும் வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டு, அவர்கள் அதற்கு பதில் அளித்துள்ளனர்' எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment